logo blog

கம்ப்யூட்டரை பாதுகாக்கணுமா? புது பிரௌசர் யூஸ் பண்ணுங்க..!

உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாக்க வேண்டுமா? அப்படியென்றால் புதிய பிரௌசரைப் பயன்படுத்துங்கள்.

ஏன் புது பிரௌசர் பயன்படுத்த வேண்டும்? 


புத்தம் புதிய அப்டேட் செய்யப்பட்ட பிரௌசரைப் பயன்படுத்துவதால் இணையம்மூலம் தாக்கும் வைரஸ் புரோகிராம்கள் தடுக்க முடியும். 

பொதுவாக ஹேக்கர்கள், நீங்கள் பயன்படுத்தும் பழைய பிரௌசர்களில் உள்ள வழுக்களைக் (Errors) கண்டுபிடித்து, பிறகே அதற்கேற்றவாறு மால்வேர் புரோகிராம்களை எழுதி, கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடுகின்றனர்.

use-new-updated-browser-to-protect-your-pc


புதிய பிரௌசர் வெளிவந்தவுடனேயே அதை நாம் பயன்படுத்த தொடங்கினால் வைரஸ் பிரச்னை பெருமளவு குறைந்துவிடும். 

புதிய பிரௌசர்களின் அப்டேட்ஸ்களை தொடர்ந்து செய்துவர 90% சதவிகித வைரஸ் பிரச்னைகள் வருவதில்லை. 

பழைய பதிப்பு பிரௌசர்களையே பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் உடனடியாக புதிய பதிப்பு பிரௌசர்களைப் பயன்படுத்துவது நல்லது. 

இந்தியாவில் இருபத்தொன்பது சதிவிகித்தனர் இன்னும் பழைய பதிப்பு பிரோசர்களையேப் பயன்படுத்துகின்றனர் என ஒரு ஆய்வு குறிப்பு தெரிவிக்கிறது. 

பழைய பிரௌசர்களை விட்டு, புதிய பிரௌசர்களுக்கு மாறாமல் இருப்பவர்கள் உடனடியாக புதிய பதிப்பு கூகிள் குரோம், பைர்பாக்ஸ், சபாரி, ஓபரா பிரௌசர்களுக்கு மாற வேண்டும். 

இதனால் பிரௌசர்கள் மூலம் பரவும் வைரஸ்களை தடுப்பதோடு, புதிய வசதிகளையும் பெற முடியும். 

நன்றி.  


Tags: browser, computer protection, computer tips, new browser, tech news, 


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.