logo blog

பிளாக்கரில் அப்டேட் செய்த படங்கள் கலர் மாறிடுச்சா...இதோ தீர்வு..!!!

நீங்க  வலைப் பதிவரா?  அப்போ உங்களுக்கு இந்த போஸ்ட் கண்டிப்பா பயன்படும்..

ஆமாங்க.. நானும்  கொஞ்ச நாளா கவனிசிட்டு வர்றேன்.. பிளாக்கர்ல அப்டேட் பன்ற படங்கள் எல்லாமே பின்னணி நிறம் மாறி டல்லடிக்குது.. 

என்னாச்சு..ஏதாச்சுன்னு எனக்கு ஒரே குழப்பம்...

போட்டோஷாப்ல பின்னணி நிறத்தை மாத்திட்டமோன்னு ஒரு சந்தேகம்....

அப்புறம் பார்த்தால் வேறொரு படத்துக்கும் அதே மாதிரியே பிரச்னை...

ஏதாவது வைரஸ் பிராப்ளமா இருக்குமோ...?ன்னு இலேசா ஒரு டவுட் வந்துடுச்சு...
solution-for-blogger-uploaded-image-color-changing-problem

வைரஸ் பிராப்ளம்னா பிளாக்கர்ல மட்டும் எப்படி படம் கலர் மாறி டல்லடிக்கும்? ங்கிற சந்தேகம்....

பிளாக்கர்ல அப்டேட் பண்ணின அதே படத்தை கம்ப்யூட்டர்ல Image Viewer ல ஓப்பன் பண்ணினால் படம் பின்னணி நிறம் நல்லாதான் இருக்கு. 

ஆனால் பிளாக்கர்ல அப்டேட் செய்த பிறகு பிளாக்கர் தளத்தில பார்த்தால் மறுபடியும் டல்லடிக்குது.. பின்னணி நிறம் மங்கலா இருக்கு.. படமும் மங்கலா இருக்கு.. 

போன பதிவுல பிரிண்டரை வேகப்படுத்த பதிவுல முதலிரண்டு படங்கள் இருக்கும். அந்த படங்களை நல்லா உத்துப் பாருங்க.. முதல்ல இருக்கிற படத்துக்கும் இரண்டாவதா இருக்கிறப் படத்துக்கும் நிறம் வித்தியாசமா இருக்கும். 


அப்போ கண்டிப்பா பிளாக்கர்லதான் பிரச்னைன்னு உறுதியா தெரிஞ்சது..

என்ன செய்யன்னு தீர்வு தேடினப்போதான் நிறைய பேருக்கு இந்த பிரிச்சினை இருக்கிறது தெரிய வந்தது. 

பிளாக்கரில் படம் கலர் சேன்ஜ் ஆகிற பிரச்னையை எப்படி சரி செய்யறது? 


பிளாக்கர்ல அப்டேட் பன்ற படங்கள் எல்லாமே நேரடியாக பிளாக்கர் தளத்துல ஸ்டோர் ஆகாது.. இது உங்களுக்கும் தெரியும். சோ.. படங்கள் ஸ்டோர் ஆகிற இடத்துலதான் ஏதோ பிரச்னை இருக்குன்னு தெரிஞ்சது.. அப்புறம் பார்த்தால் கூகிள் ப்ளஸ்ல இருக்கிற ஒரு சின்ன செட்டிங்ஸ்தான் பிரச்னைக்கு காரணம்னு தெரிஞ்சது..

உங்களுக்கு கூகிள் ப்ளஸ் அக்கவுண்ட் நிச்சயம் இருக்கும். 

  • கூகிள் ப்ளஸ் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க..
  • Home கிளிக் பண்ணுங்க
  • Settings போங்க...
  • அடுத்து வர்ற பக்கத்துல Scroll செய்யுங்க..
  • Photos ங்கிற தலைப்புக்கு கீழ பாருங்க...
  • Auto-enhance -ல இருக்கிற டிக் மார்க்கை எடுத்துடுங்க..
solution-for-blogger-uploaded-image-color-changing-problem

solution-for-blogger-uploaded-image-color-changing-problem

அவ்வளவுதான்.. இப்போ மறுபடியும் உங்களோட பிளாக்கர் தளத்துல படத்தை அப்லோட் பண்ணிப்பாருங்க... உங்களோட ஒரிஜினல் இமேஜ் அப்படியே அப்லோட் ஆகியிருக்கும். 

இப்போ மறுபடியும் இந்த பதிவோட  ஆரம்பத்துல இருக்கிற படங்களைப் பாருங்க...வித்தியாசம் தெரியுதா? 

உங்களுக்கும் இந்த வித்தியாசம் தெரிந்ததுன்னா..நீங்க இப்பவே டெஸ்ட் பண்ணிப் பாருங்க...

இது கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படங்களுக்கும் பொருந்தும். 

நன்றி.

Tags: image color changing problem, image background color change in blogger, Why images change colors when uploaded to blogger, changes image color automatically, image problem in blogger blog, uploaded images get changes with dullness, original image to dull image in blogger, blogger images problem, automatic changes image in blogger, background color changing, blogger tips, color problem in blogger, image color changing problem, பிளாக்கர் டிப்ஸ்.

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.