logo blog

யாரும் கண்டுபிடிக்க முடியாத ஸ்ட்ராங் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?

கணினி பயன்படுத்தும் அனைவருமே இணையம் பயன்படுத்தும் காலம் இது. இணையத்தில் எந்த ஒரு வலைத்தளத்தின்சேவையானாலும் நிச்சயம் அத்தளதில் நுழைவதற்கான பயனர் பெயரும், கடவுச்சொல்லும் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். 

உதராணமாக நாம் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்த, பயனர் பெயர், மின்னஞ்சல் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். 

இவ்வாறு சாதாரண மின்னஞ்சல் முதற்கொண்டு, வணிகம் தொடர்பான வலைத்தளங்கள், இன்டர்நெட் பேங்கிங், அலுவலக வேலைகள் தொடர்பான தளங்கள், சமூக வலைத்தளங்கள், இணையத்தினூடாக பணிபுரியும் வலைத்தளங்கள் என முக்கியமான தளங்களிலும் நாம் பயனர்பெயர், கடவுச்சொற்க்களைப் பயன்படுத்துகிறோம். 

ஆனால் பாஸ்வேர்ட், பயனர்பெயர்    பாதுகாப்பு குறித்து ஒருபோதும் சிந்திப்பதேயில்லை. உங்களுடைய வங்கி கணக்கு முதலான தகவல்களை கையாள வங்கிகளின் இணையத்தளங்களில் பயனர் பெயர், கடவுச் சொல் ஆகியவற்றை மிக எளிதாக, மற்றவர்கள் யூகிக்கும் வகையில் கொடுத்திருந்தால் உடனடியாக அவற்றை நீங்கள் ஒரு கடினமான கடவுச்சொல்லாக மாற்ற வேண்டும். 

எளிதாக நினைவு வைத்துக்கொள்வதற்காக உங்களது செல்லப் பிராணியின் பெயரோ, வீட்டிலுள்ளவர்களின் பெயரோ, மொபைல் நம்பர் அல்லது கார் நம்பர், அல்லது மாதங்களின் பெயர்கள், பொது பெயர்கள் என நீங்கள் வைத்திருப்பீர்கள்.. அவ்வாறானவர்களும் கடினமான பாஸ்வேர்ட் ஒன்றினை உடனடியாக அமைத்திட வேண்டும். 

கடினமான பாஸ்வேர்ட் என்றால் என்ன?

மற்றவர்கள் யூகிக்காத வண்ணம், எண்ணும் எழுத்தும் சிறப்பு குறியீடுகளும் கலந்து கடவுச்சொல்லை அமைப்பது. 

உ.ம்:

tH@n9@^^p@1a^!


இவ்வாறு அமைப்பதன் மூலம் மற்றவர்கள் எளிதாக யூகித்து பாஸ்வேர்டை கண்டறிய முடியாது. 

இப்படி நாமாக பாஸ்வேர்ட் கொடுக்கலாம்.. அல்லது பாஸ்வேர்ட் உருவாக்கிக் கொடுப்பதற்கான மென்பொருளையும் பயன்படுத்தலாம். இவைகளை தானியங்கி முறையில் செயல்பட்டு, யாருமே யூகிக்க முடியாம பாஸ்வேர்ட்களை உருவாக்கிக் கொடுக்கின்றன. 

இந்த மென்பொருளை சாதாரண கணினி பயனர் முதல், பெரிய பெரிய நிறுவனங்களின் முக்கியமான கம்ப்யூட்டர்கள் வரைப் பயன்படுத்தலாம். அதிக பணம் மற்றும் முக்கியமான டாக்குமெண்ட்கள் மற்றும் வர்த்தக ரீதியான பரிமாறல்கள் உள்ள கம்ப்யூட்டர்களில் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்தி, பாஸ்வேர்ட் உருவாக்கிப் பயன்படுத்தலாம். 

இந்த மென்பொருள்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே பாஸ்வேர்டை மாற்றியமைக்கின்றன. இதனால் தொடர்ந்து ஒரே பாஸ்வேர்ட் பயன்படுத்துவது தவிர்க்க முடிகிறது. தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஒரே மாதிரியான பாஸ்வேர்ட் பயன்படுத்தினாலும் அதையும் வெகு விரைவில் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே இதுபோன்ற பாஸ்வேர்ட் உருவாக்கித் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்தி, தானியங்கி பாஸ்வேர்ட்களை அமைத்துப் பயன்படுத்தலாம். ரேண்டமைஸ்ட் முறையில் இந்த மென்பொருள் பாஸ்வேர்ட்டை அமைப்பதால் ஒரு முறை அமைத்த பாஸ்வேர்ட் மறுமுறை உருவாக்காது. 

ஒவ்வொரு கணினிக்கும் தனிப்பட்ட முறையில் ரேண்டமைஸ்டு முறையில் பாஸ்வேர்ட் அமைத்துக்கொடுக்கிறது. 

இம்மென்பொருள் வேண்டுவோர் கூகிள் சர்ச்சில் "free password generator download" அல்லது password generator எனக்கொடுத்து தேடி, வேண்டிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 

நன்றி. 




Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.