logo blog

கூகிள் ஸ்மார்ட் வாட்ச் - ஒரு பார்வை

ஸ்மார்ட்போன்களின் மோகம் குறைவதற்கு முன்பாகவே தற்பொழுது ஸ்மார்ட் வாட்சுகளின் மோகமும் அதிகரித்து வருகிறது. 

புதிய தகவல்தொடர்பு சாதனங்கள் மக்களின் மனதில் பெரும் கவர்ச்சிகரமான இடத்தைப் பெற்றுவிட்டது என்றால் மிகையாகாது. 

தொடர்ந்து வரும் ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஸ்மார்ட் போன்களின் மோகம் தற்பொழுது ஸ்மார்ட் வாட்சுகளை வாங்கிப் பயன்படுத்துவதிலும் தொடர்கிறது. 

google gem smart watch

சாம்சங், சோனி போன்ற மிகப்பெரிய தொலைத்தொடர்பு சாதனங்களை வழங்கும் நிறுவனங்கள் "ஸ்மார்ட் வாட்ச்"ஐ வெளியிட்டுவிட்டன. 

நமது தொழில்நுட்பம் தளத்திலும் இதுபற்றிய பதிவுகளைப் படித்திருப்பீர்கள். 

இதுகுறித்த கடந்த பதிவுகள்: 


தற்பொழுது நோக்கியா, ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனங்களும் ஸ்மார்ட் வாட்சை விரைவில் வெளியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிறுவனங்களுக்கு முன்பே கூகிள் தனது புதிய Nexus Smartwatch இம்மாத இறுதியில் வெளியிடுகிறது. 

கூகிள் ஸ்மார்ட் வாட்சைப் பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன. 

Google Gem SmartWatch specifications: 


கூகிள் ஸ்மார்ட் வாட்சானது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்ட் கிட்-கேட் 4.4 OS பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. 

கூகிள் ஸ்மார்ட் வாட்ச் என அழைக்கப்பட்ட பெயர் இப்பொழுது Google Gem Smartwatch என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆங்கிலத்தில்:

Search engine giant Google may launch a smartwatch called Gem later this month to coincide with the release of its Android 4.4 Kit Kat. 

the watch is a part of the Nexus brand and will reportedly be announced on October 31 this year.

Tags: google gem smartwatch, google smartwatch, google smartwatch released, smartwatch from google, smartwatch specifications, 

நன்றி. 


Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.