logo blog

ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்ட கூகிள் தேடல் வசதி

ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான தனது புதிய உத்தியோகப்பூர்வ தேடல் பயன்பாட்டை மேம்படுத்தித் தொடங்கியுள்ளது கூகிள். இப்புதிய மேம்படுத்தலானது சில சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. அதில் OK Google என்ற வசதியைக் குறிப்பிடலாம். இந்த ஓ.கே கூகிள் வசதியானது அழகிய புதியதொரு கூகிள் தேடல் பயன்பாட்டை கொடுக்கிறது. 

இந்த Ok Google வசதியானது தற்பொழுது US ல் மட்டுமே கிடைக்கிறது. எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூகிள் சர்ச் அப்டேட்டானது பல்வேறு நிலைகளில் நடைபெறுவதால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இந்த வசதி தோன்ற சிறிது காலம் ஆகலாம்.
google-search-updated-with-new-features-for-android-device

ஆண்ட்ராய்ட் சாதனத்திற்கான கூகிள் மேம்படுத்தபட்ட தேடலில் உள்ள வசதிகள் 

  • Ok Google (US Only)
  • மேலதிக தேடல் முடிவுகள்
  • நீங்கள் தேடும் நபர்களைப் பற்றிய மேலதிக தகவல்களை அப்டேட் செய்யும்படி கூகிளிடம் கூறும் வசதி.

இந்த தேடல் மேம்படுத்தல் வசதியானது ஆண்ட்ராய்ட் 4.1 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளை பயன்படுத்தும் பயானளர்களுக்கு மட்டும் தோன்றும். 

ஆண்டஃராய்ட் 4.0 க்கு கீழுள்ள பதிப்புகளில் இந்த மேம்படுத்தப்பட்ட தேடல் வசதிகள் கிடைப்பது பற்றியோ, அப்டேட்டிங் பற்றிய செய்திகளையோ கூகிள் இன்னும் வெளியிடவில்லை. மற்ற பதிப்புகளுக்கும் இவ்வசதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. 

google search for android device, google search for new android 4.0 smartphone, google search updated for 4.1 android tablet pc, google search updated

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.