logo blog

கூகிள் தேடலில் ஆபாச தளங்களை தவிர்க்க | குழந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்

உங்கள் வீட்டுக் குழந்தைகள் இன்டர்நெட் பயன்படுத்துகிறதா? அப்படி என்றால் அவர்களுக்கு பாதுகாப்பான தேடல் வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியம்.  பள்ளி சிறுவர்கள் கல்வித் தொடர்பான தகவல்களை தேடும்பொழுது, தேவையில்லாத ஆபாச இணையதளங்கள், படங்கள், வீடியோக்களை காண நேரிடுகிறது.

இதனால் அவர்களின் மனதில் விபரீத எண்ணங்களை தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இவற்றை தடுக்க கூகில் தேடலை பாதுகாப்பாக அமைத்துக் கொடுக்கலாம்.

கூகிள் தேடலில் பாதுகாப்பு:





Safe google Search for Kids
குழந்தைகளுக்கான பாதுகாப்பான கூகிள் தேடல்



கூகிள் தேடலில் Safe Search என்ற வசதி உண்டு. இதை செயல்படுத்தினால், கூகிள் சர்ச் என்ஜினில் தேவையில்லாத ஆபாச படங்கள் வருவதை தடுக்க முடியும்.

செய்முறை: 

  • கூகிள் தேடலில் Safe Search வசதியை செயல்படுத்த கீழிருக்கும் சுட்டியை அழுத்தவும். 
  •  http://www.google.com/preferences
  • தோன்றும் பக்கத்தில் Safe Search Filters என்பதில் கீழுள்ள Filter Explicit Results என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள்.

  • google-safe-search-for-kids-and-school-students

  • செய்த மாற்றத்தை கீழுள்ள Save என்ற பட்டனைக் கிளிக் செய்து சேமித்துவிடுங்கள். 
  • அடுத்து அருகில் இருக்கும் Safe Search என்பதைத் சொடுக்குங்கள். 
  • திறக்கும் பக்கத்தில் உங்களுடைய கூகிள் பாஸ்வேர்ட் கேட்கும். பாஸ்வேர்ட் கொடுங்கள்.
  • பாஸ்வேர்ட் கொடுத்த  பிறகு,  இவ்வாறு ஒரு படம் தோன்றும். 
  • google-safe-search-for-kids-and-school-students
  • அதில் Lock Safe search என்பதை சொடுக்குங்கள்.
  • இப்பொழுது  Locking SafeSearch across all Google domains...என்ற வாசகத்துடன் அதற்கான பிராசஸ் நடக்கும். 
  • சிறிது நேரத்தில் செய்த மாற்றங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டு விடும். 

google-safe-search-for-kids-and-school-students

அவ்வளவுதான். இனி, கூகிள் தேடலில் ஆபாச படங்களோ, அல்லது ஆபாசத் தகவல்களோ உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்காது. பயமின்றி இன்டர்நெட் பயன்படுத்த அவர்களை அனுமதிக்கலாம். 

இந்த செட்டிங்சை செய்த பிறகும் உங்களுக்கு ஏதேனும் பாதுகாப்பற்ற, ஆபாசத் தகவல்களோ அல்லது படங்களோ தேடல் முடிவில் கிடைத்தால் அதைப்பற்றி கூகிளுக்கு புகார் அளிக்கலாம். புகார் அளிக்க செல்ல வேண்டிய சுட்டி: Report Explicit content

குறிப்பு: உங்களுடைய பிரௌசரில் உள்ள குக்கிகளை டெலீட் செய்ய வேண்டியிருந்தால், டெலீட் செய்துவிட்டு  மீண்டும் புதியதாக Safe Search Settings செய்துகொள்ள வேண்டும். 

ஆங்கிலத்தில்: 

SafeSearch: Turn on or off

Many people prefer not to have adult content included in their search results (especially if kids use the same computer). SafeSearch filters provide you with the ability to change your browser setting to prevent adult content from appearing in your search results. No filter is 100 percent accurate, but SafeSearch should help you avoid most of this type of material.

SafeSearch for Google Images

Learn to control your Images experience using SafeSearch and how to report offensive images to Google. Check out http://support.google.com/images for more information.

Turn SafeSearch on or off

Visit the Search Settings page at www.google.com/preferences. 

In the "SafeSearch filters" section:

Turn on SafeSearch by checking the box next to "Filter explicit results." This will filter sexually explicit video and images from Google Search result pages, as well as results that might link to explicit content.

Turn off SafeSearch by leaving the box unchecked. With SafeSearch off, we will provide the most relevant results for your query and may serve explicit content when you search for it.

Make sure to click the Save button save button screenshot at the bottom of the page.

If you're signed in to your Google Account, you can also lock the SafeSearch filter so others don't change it by clicking Lock SafeSearch. 

Change my settings

SafeSearch should remain set as long as cookies are enabled on your computer, although your SafeSearch settings may be reset if you delete your cookies.

Report explicit content

We do our best to keep SafeSearch as up-to-date and comprehensive as possible, but objectionable content sometimes slips through the cracks. If you have SafeSearch set to filter explicit content, but still come across it, please report explicit content.

Thanks and Source: Google.com

Tags: safe search, google safe search, safe search for kids on google, google search engine safe search, tech news. 



Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.