logo blog

வைரஸ் பிரச்னை வராமல் இருக்கணுமா? உபுண்டு யூஸ் பண்ணுங்க !

உபுண்டு என்றால் என்ன? 


உபுண்டு என்பது "லீனக்ஸ்" இயங்குதளங்களில் ஒன்று. விண்டோஸ் இயங்குதளத்தைப் போன்று மிகச்சிறந்த வசதிகளைக் கொடுக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம். இது ஒரு சுதந்திர இலவச மென்பொருள். இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஓபன் சோர்ஸ் வகையை சார்ந்தது. உலக அளவில் 20 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் இதை பயன்படுத்துகின்றனர்.

ubuntu 13. 10 free operating system
உபுண்டு - சுதந்திர மென்பொருள்

விண்டோஸ் - உபுண்டு: 


விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் உபுண்டு லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் சிறந்தது. இவ்வியங்குதளத்தை புரோகிராம் டெவலப்பர்களால் வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தில் மாற்றும் எதுவும் செய்ய முடியாது. விண்டோஸ் இயங்குதளத்தில் Virus பாதிப்புகள் அதிகம் இருக்கும்.

ஆனால் உபுண்டுவில் வைரஸ், மால்வேர் போன்ற நிரல்கள் போன்றவை இயங்க முடியாது. அதற்கேற்ற புரோகிராம் கட்டமைப்பை பெற்றது உபுண்டு லீனக்ஸ் இயங்குதளம். விண்டோஸ் இயங்குதளம் எந்த நேரத்திலும் வைரசால் முடக்கப்படும் வழுக்கள் (Error) நிறைந்துள்ள ஒரு அபாயகரமான இயங்குதளம்.


உபுண்டுதான் பெஸ்ட்..!


உபுண்டு இயங்குதள நிரலகங்களில் வேண்டிய மாற்றங்களை நாம் செய்துகொள்ள முடியும்.  எனவே மற்ற கட்டண இயங்குதளங்களைக் காட்டிலும் உபுண்டு இயங்குதளமே சிறந்தது.

உபுண்டு இயங்குதளமானது தனிப்பட்ட ஒருவருக்குச் சொந்தமானது கிடையாது. அது பொதுப்படையான திறந்தவெளி சுதந்திர மென்பொருள் ஆகும்.

கணினியை இயக்க கிடைக்கப்பெறும் இலவச இயங்குதளங்களில் மிகச் சிறப்பானது முதன்மையானதும் உபுண்டு இயங்குதளமே..!

உபுண்டு 13.10 புதிய பதிப்பைப் பெற


உபுண்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு இப்பொழுது கிடைக்கிறது. உபுண்டு 13.10 என்ற இப்பதிப்பில் மிகச் சிறந்த வசதிகள் உள்ளன.

ubuntu-13.10-free-os-for-desktops-servers-phones-and-cloud
அலைபேசியிலும் உபுண்டு


கேலக்சி நெக்சஸ் , கேலக்சி நெக்சஸ் 4 உட்பட சில ஸ்மார்ட் போன்கள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்கள் (Galaxy nexus, Galaxy nexus 4, laptop, desktop, mobile)  ஆகியவற்றிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை சிறந்த வசதிகளாக குறிப்பிடலாம். 

முன்பு சோதனைப் பதிப்பாக கிடைத்த உபுண்டு இயங்குதளம், தற்பொழுது முழுமையான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம். 

உபுண்டுவின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்ய சுட்டி:  http://www.ubuntu.com/download

மேலும் உபுண்டு பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள சுட்டி: உபுண்டு இயங்குதளம் பற்றிய முழுமையான தகவல்கள்

Tags: new ubuntu version, new ubuntu os for pc, download ubuntu os for desktop computer, download ubuntu os for Laptop computer, ubuntu for mobile, ubuntu for tv, ubuntu os for android, new version ubuntu mobile, ubuntu new version 13.10., free operating system ubuntu. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.