logo blog

லேப்டாப் வாங்கப் போறீங்களா? ஒரு நிமிஷம் கவனிங்க..!

லேப்டாப் வாங்கப் போறீங்களா?.. ஒரு நிமிஷம்..!

தீபாவளிப் பண்டிகையின் ஒரு பகுதியாக நமக்கு விருப்பமான எலக்ட்ரானிக் ஐட்டங்கள் வாங்குவதும் இருக்கும். குறிப்பாக மாணவர்கள், அலுவலக நண்பர்கள், கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் லேப்டாப்,டேப்லட்,ஆண்ட்ராய்ட் போன் என அவரவர்களுக்கு ஒரு பெரிய பட்டியலையே போட்டு வைத்திருப்பார்கள். 

எப்படியும் இந்த தீபாவளிக்காவது இதை வாங்கிவிட வேண்டும் என்ற பேராவல் அவர்கள் மனதில் இருக்கும். அந்த லேப்டாப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பல்வேறு நிறுவனங்களின் விதவிதமான லேப்டாப்கள் வெளிவந்துகொண்டே உள்ளது. 


அவற்றில் எதை வாங்குவது? எந்த மாதிரியான லேப்டாப் வாங்கினால் நல்லது? எதில் அதிக வசதிகள் உள்ளது? இப்படி உங்களுக்கு நிறைய குழப்பங்கள் உருவாகியிருக்கும்.

நண்பர்கள் பலரும் பலவிதமான பிராண்டுகளை பரிந்துரை செய்வார்கள். அவர்கள் பயன்படுத்திய கணினி, டேப்டாப் பிராண்டுகளையே பெரிதும் பரிந்துரைப்பார்கள். ஆனால் அவர் எப்பொழுது வாங்கினார்? அதில் என்னென்ன உள் பகுதிப்பொருட்கள் (inside parts), உட்கூறுகள், சிறப்புகள் இடம்பெற்றிருக்கின்றன (Laptop Features) என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு சொல்லத் தெரியாது.

சரி.. ஒரு நல்ல லேப்டாப் வாங்குவது என்றால் என்ன செய்ய வேண்டும்? எப்படி ஒரு நல்ல லேப்டாப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

இதோ அதற்கான அடிப்படை வழிமுறைகள்: 

Processor: 


கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் என்றால் இந்த வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கணினி இயங்குவதற்கு தேவையான அடிப்படைச் செயலி இது. இது இல்லை என்றால் கம்ப்யூட்டரே செயல்படாது. மனிதனுக்கு எப்படி மூளையோ, அதுபோல கணினிக்கு முக்கியமான ஒரு பகுதி உறுப்பு இந்த பிராசசர். தாய்ப்பலகை என்று சொல்லக்கூடிய Motherboard -ல் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பகுதிக்கூறு இது. இதைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தில் முதன்மையான இன்டெல். (Intel processor). இதுதான் தற்பொழுது உள்ள நிலையில் சூப்பர் பிராச்சர். இதில் மூன்று தரங்களில் கிடைக்கிறது. 

1. Intel core i7
2. Intel core i5
3. Intel core i3

நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் இவற்றில் ஏதாவது ஒன்று இடம்பெற்றிருப்பதை உறுதி செய்யுங்கள். Intel core i7 processor இடம்பெற்றிருந்தால் மிகவும் சிறப்பு. லேப்டாப்பின் வேகம் சிறப்பாக இருக்கும். Graphics work செய்யும் நண்பர்கள், அதிக கொள்ளளவு கொண்ட மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்கள், தொழில்முறையில் பயன்படுத்துபவர்கள் இந்த வகை பிராச்சர்கள் உள்ளதை தேர்ந்தெடுக்கலாம். 

இதுமட்டும்தான் பிராச்சரா.. வேறு இல்லையா என்றால் குறைவான விலைகொண்ட பிராச்சர்களும் உண்டு. Intel Dual core, inter core 2 Duo போன்றவை. சாதாரணமான பயன்பாட்டிற்கு லேப்டாப் வாங்குபவர்கள் இந்த பிராச்சர்கள் இடம்பெற்ற லேப்டாப்பை தேர்வு செய்யலாம்.  

இதை விட தரம் குறைந்த விலை மலிவான பிராசசர்களும் உண்டு. ஆனால் அவை இன்றைய நவீன தொழில்நுட்பத்திற்கு சரிப்பட்டு வராது என்பதே என்னுடைய கருத்து. 

பிராசசரின் வேகம்: 


இதுபோன்ற பிராச்சர்களை கேட்டு அறிந்துகொள்வதோடு அதனுடைய வேகத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். Processor ன் வேகத்தை GHz என்ற அளவீடால் குறிக்கப்பட்டிருக்கும். 

உதாரணமாக Intel® CoreTM i7-640M Processor 2.80 GHz 
இதில் 2.80 GHz என்பது பிராசசரின் வேகத்தை குறிப்பது. பிராச்சரின் வேகத்தை குறைக்கும் எண் குறைய.. குறைய... கணினியின் வேகமும் குறைவாக இருக்கும் என்று பொருள். பிராசசரை கவனிச்சு வாங்குங்க....

அதேபோல பேட்டரி (Battery)...,பேட்டரி எப்படிப்பட்டது? எவ்வளவு நேரம் பேக்கப் (Battery backup) கொடுக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? லேப்டாப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது சார்ஜ் போடலாமா? இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது.. அதுமட்டுமல்லாமல்  Screen, Ram, Motherboard, Disk drive, DVD Drive என  லேப்டாப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பகுதிகளைப் பற்றிய  சிறப்புகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

அதனுடன் வேறென்னன்ன மேலதிக சிறப்பம்சங்கள் உள்ளது என்பதையும் நன்றாக விசாரித்து வாங்க வேண்டியது உங்களுடைய கடமை... கவர்ச்சியான விளம்பரத்தாலும், அதில் உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன உள்ளது என்பதை தெரியாமல் வாங்கிவிட்டு, பிறகு வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.. 

உலகத்தரமிக்க லேப்டாப்புகளை Samsung, Asus, LG, Lenovo, Sony, HP, Dell, Acer போன்ற நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.உங்களுடைய தொழிலுக்கேற்ற, பயன்படுத்தும் தன்மைகேற்ப, சூழலுக்கேற்ற லேப்டாப்பை,  நன்றாக விசாரித்து வாங்குவது புத்திசாலித்தனம். 


Tags: Intel core processor, processor, free processor, intel core processor, intel core i7, intel core i5, intel core 3,  laptop features, best laptop, how to choose a good laptop, how to decide to buy good laptop, tips for buying laptop. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.