logo blog

நோக்கியா லூமியா 520 ஸ்மார்ட் போனில் வீடியோ ரெக்கார்ட் செய்வது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா லூமியா பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளதோடு, புதிய வசதிகள் பலவும் பெற்றுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்வதெனில் கேமரா வசதி. 

கேமராவின் மூலம் போட்டோக்கள் எடுப்பது மட்டுமல்லாமல், அழகான தருணங்களை, காட்சிகளை வீடியோவாகவும் பதிவு செய்யலாம். 

நோக்கியா லூமியா 520 போனில் வீடியோ ரெக்கார்ட் செய்வது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம். 

கேமாவை உயிர்பிக்க கேமரா பட்டன் மீது அழுத்தவும். படத்தில் ஆரஞ்சு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பட்டன் கேமராவை உயிர்பிக்கும் பட்டன் ஆகும். 

how-to-record-video-in-nokia-lumia-520

போட்டோ மோட்டில் இப்பொழுது கேமரா திறக்கும். போட்டோ மோடிலிருந்து வீடியோ மோடிற்கு மாற வீடியோ கேமரா தோற்றத்தில் உள்ள சிறிய படத்தை tap செய்யுங்கள். 

இப்பொழுது வீடியோ மோட் திறந்துகொள்ளும். 

ஜூம் அல்லது ஜூம் அவுட் செய்ய இரு விரல்களை (கட்டை விரல் + சுட்டு விரல்)ஸ்கிரீனில் பதித்து, விரல்களை விரித்து நகர்த்துவதன் மூலம் குறிப்பிட்ட ஏரியாவை ஜூம் அல்லது ஜூம் அவுட் செய்யலாம். 

வீடியோ ரெக்கார்டிங் தொடங்க கேமரா பட்டனை அழுத்தவும். (படத்தில் உதாரணத்திற்காக கேமரா பட்டனை (Camera) ஆரஞ்சு வண்ணத்தில் காட்டியுள்ளனர்.) இப்பொழுது டைமர் ஓடத்தொடங்கும்.. 

மீண்டும் கேமரா பட்டனை அழுத்த டைமர் நின்றுபோகும். 

ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோவைப் பார்க்க வலதுபுறம் Swape செய்ய, வீடியோவை இயக்குவதற்கான ப்ளே பட்டன் தோன்றும். அதை இலேசாக தட்டினாலே (TAP) நீங்கள் பதிவு செய்த வீடியோ ஓடத்தொடங்கும். 

ஆங்கிலத்தில்: 

Besides taking photos with your phone, you can also capture your special moments as videos.

  • To switch the camera on, press the camera key.
  • To switch from photo to video mode, tap switch to video icon.
  • To zoom in or out, place two fingers on the screen and slide them together or apart.
  • To start recording, press the camera key. The timer starts to run.
  • To stop recording, press the camera key. The timer stops.
  • To view the video, swipe right, and tap play icon. 
  • The video is saved to your Camera Roll in the Photos hub.

மூலப்பதிவு: நோக்கியா.காம். 

நன்றி.. 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.