logo blog

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் - World's First Computer Programmer

இன்று எத்தனையோ கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் இருக்கிறார்கள். பல லட்சக்கணக்கான புரோகிராம்கள் தினம்தோறும் எழுதப்படுகின்றன. வெகு சாதாரணமாகிவிட்டது புரோகிராம் எழுதுவது. கணினி தொடக்க காலத்தில் முதன் முதலில் கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதியவர் யார் தெரியுமா? அகஸ்டா கிங் என்ற பெண்மணி.

இவர் ஒரு மிகச்சிறந்த கணித அறிஞர். இசைக் கலைஞர். தனது கணித அறிவை பயன்படுத்தி, அந்த காலத்தில் இயங்கிய கணிப்பீட்டு கருவி அனலிட்டிக்கல் என்ஜினுக்கு புரோகிராம்களை எழுதினார். இதனால்தான் இவர் உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் என அழைக்கப்படுகிறார்.

தொடக்க காலத்தில் கம்ப்யூட்டர்/கணினி எப்படி இருந்தது தெரியுமா?

மிகப்பெரிய அறையை அடைத்துக் கொண்டிருந்தது. அதன் எடை எவ்வளவு தெரியுமா? 1000 கிலோ. ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மை அதுதான்.

நவீன ரக கணினிகளை பயன்படுத்தும் நாம் ஆரம்ப காலத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை பற்றி படித்தால் கண்டிப்பாக வியந்து போவோம்.
Also Read : லேப்டாப் ரிப்பேர் ஆகாமல் பராமரிப்பது எப்படி?

worlds first computer programer

கணினியும், பயன்பாடும்: 

தற்போதைய சூழலில் கணினி அனைத்து வீடுகளிலுமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் போல மிக எளிதாக நுழைந்துவிட்டிருக்கிறது. வீட்டில் மட்டுமா?

கணினி அலுவலகம், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், விற்பனை வளாகங்கள், மருத்துவமனைகள், என எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் கணினியே ஆட்சி செய்கின்றது.

கணினி இல்லையெனில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும் அளவிற்கு கணினி எங்கும் வியாபித்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நம் கைக்குள்ளே சாதுவாய் ஒரு செல்லப் பிராணியைப் போல் படுத்திருக்கும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது தெரியுமா?

Read Also: மதர் போர்ட் - Mother Board என்றால் என்ன? 

அத் தொழில்நுட்பத்தின் பின்னணி, அதற்காக தூக்கத்தை இழந்து பல வருடகாலமாக உழைத்து இந்நிலையை எட்டிய அவர்களின் உழைப்பு எப்படிப்பட்டது என்பதை படிக்கும்போது வியப்பிலும் வியப்பு ஏற்படுகிறது.

மென்பொருள் கணினியின் உயிராதாரம். இந்த உயிராதாரம் இருந்தால் மட்டுமே கணினி இயங்கும். மென்பொருள் Software என்பது கணினியை இயக்குவதற்கு எழுதப்படும் புரோகிராம்கள்.  இந்த புரோகிராமிங் செய்பவர்களைத்தான் Computer Programmer என்பர்.

தற்பொழுது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் கணினியின் தொடக்க காலத்திற்கு வருவோம். 1790 முதல் 1871 வரை தனது இடைவிடாத உழைப்பால் ஒரு முழுமையான கணினியின் மாதிரியை உருவாக்கியவர் சார்லஸ் பாபேஜ்.

Also Read  : DVD -ல் டிஸ்க் மாட்டிக்கொண்டால் வெளியே எடுப்பது எப்படி? 
கணிதத்தையும் இயந்திரத்தையும் இணைத்து Analytical Engine என்ற முதல் கணினி கருவியை அவர் உருவாக்கினார்.



Father of computer Charles Babage
சார்லஸ் பாபேஜ்
அவர் உருவாக்கிய கணினி மிகப்பெரிய அறையில் இடம்பிடித்தது. அதன் எடையோ ஆயிரம் கிலோ.. (மயக்கமடைய வேண்டாம்). அத்துடன் தற்பொழுது நாம் இலாவகமாக பயன்படுத்தும் கீபோர்டு, மௌஸ் அதற்கு இல்லை.

அந்த அறைக்குள் பெரிய பெரிய இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்டிருந்தது.

வெறும் புள்ளிகள், கோடுகள் ஆகியவை இணைந்து செயல்பட்டது. கணினியின் நினைவுத்திறனும், வேகமும் நத்தையின் வேகத்தை விட மிக குறைவானது. அதாவது இன்றைய கணினியின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பத்து இலட்சம் மடங்கு குறைவான வேகம் கொண்டது.
Also Read : கம்ப்யூட்டரை வேகமாக Shut Down செய்ய 
World's first computer programmer
Add caption
Also Read: கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் சில விசைகள் வேலை செய்யவில்லை என்றால் அவசரத்திற்கு டைப் செய்வது எப்படி? 
முதல் கணினி உருவாகி, அது செயல்பட ஆரம்பித்த அந்த தருணம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கு விதை ஊன்றப்பட்ட தருணமாக கருதபடுகிறது.

அதைக் கண்டுபிடித்த பிராடி வில்லியம்ஸ் அந்த வினாடியைப்போல் என் வாழ்நாளில் வேறெந்த நேரத்தையும் நான் உணர்ந்ததில்லை என்று உணர்வுப் பூர்வமாக கூறியிருக்கிறார்.

டிரான்சிஸ்டர்.. வருகை

டிரான்சிஸ்டர் இந்தியா சுதந்திரம் அடைந்த வருடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது வெற்றிடக் குழலுக்கு வேகத்தடை போட்டது. நீ இருந்த வரைக்கும் போதும்.. இனி என்னுடைய ராஜாங்கம்தான்.. என்று அதனுடைய பழைய தொழில்நுட்பத்தை தூக்கி நொறுக்கிவிட்டு, இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் தன்னை அடக்கிக்கொண்டது.

ஒருங்கிணைச் சுற்றமைப்பு என்று கூறப்படும் Intergerated Cirucuit - IC கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுப்பிடிக்கப்பட்ட ஆண்டு 1958. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் உருவாயின.

இந்த கண்டுபிடிப்பின் மிகப்பெரிய பயன் என்னவெனில் ஒரு Chip -ஐப் பயன்படுத்தி பல கணினிகளின் பகுதிகளை இணைக்க முடிந்ததுதான்.

இதனால் ஒரு Operating System-ஐ பயன்படுத்தி பல நிரல்வரிகளை (Programmes) இயக்குவதற்கான வாய்ப்பு பிரகாசமானது. இதுவே நான்காம் தலைமுறைக் கணினியைக் கண்டுபிடிக்க ஆதாரமாகவும் இருந்தது.

INTEL நிறுவனம்: 

இன்டெல் நிறுவனம் 4004 Chip-ல் Central Processing Unit - CPU, Momory, Input, OutPut Devices, ஆகியவைகள் இடம்பெற்றன. இதன் மூலம் ஒரு கணினி ஒரு முழுமையான வியாபார வடிவத்திற்கு வந்தது.

IPM நிறுவனம்: 

முதன் முதலில் Personal Computer (பர்சனல் கம்ப்யூட்டர் - தனியாள் கணினி) வழங்கியது. 'டைம்ஸ்' இதழ் அந்த ஆண்டின் சிறந்த மனிதனாக இந்த பர்சனல் கம்ப்யூட்டரை தேர்ந்தெடுத்து குறிப்பிடத்தகுந்த விடயம்.

அன்று மட்டும் கணினி என்ற விதையை சார்லா பாபேஜ், பிரட்டி வில்லியம்ஸ், அடா பைரன் லவ்லேஸ் மற்றும் கணினி தொடர்புடைய ஜாம்பவான்கள் விதைக்காமல் இருந்திருந்தால்.. இன்று நாம் காணும் கையடக்கத் தொலைபேசி.. கணினி... டிஷ், சாட்டிலைட்.. இப்படி நிறைய தொழில்நுட்பங்கள் நமக்கு சாத்தியமாகமலேயே போயிருக்கலாம்.
- தங்கம்பழனி


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

Share this

6 comments

அருமையான பகிர்வு நண்பரே...! நிச்சயம் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.

அருமையான பகிர்வு.
அருமை.

நல்ல தகவல் . தகவல் உலக மகான்களுக்கு வணக்கம் . நன்றி

வருகை தந்து கருத்தளித்த நண்பர்களுக்கு நன்றி.. !

உங்களுக்குப் பிடித்த தங்கம்பழனி வலைத்தளத்தின் பதிவுகளை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.. !!!!

Very nice information thanks you so much

அருமையான விசயங்கள்.
-Killergee

www.killergee.blogspot.com

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.