logo blog

Auto Play வசதியை நிறுத்துவது எப்படி? | கம்ப்யூட்டர் டிப்ஸ்

 How to block auto-play option in your computer

ஒரு சில பென்டிரைவ் கம்ப்யூட்டரில்  இணைத்தவுடன், அதிலுள்ள வைரஸ் கம்ப்யூட்டருக்கு பரவி, கம்ப்யூட்டரை செயல்படாமல் செய்துவிடும். சில CD க்களும் அப்படியே. இதற்கு காரணம், ஆட்டோ பிளே மூலம் அதில் உள்ள பைல்கள் ரன் ஆவதுதான். அப்படி ரன் ஆகும்பொழுது, அதிலுள்ள வைரசும் கம்ப்யூட்டருக்கு வந்துவிடும்.

கம்ப்யூட்டரில் உள்ள ஆட்டோ ப்ளே வசதியை நிறுத்துவதன் மூலம்  பென் டிரைவ் போன்ற ரிமூவபிள் டிவைஸ் மூலம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு வைரஸ் பரவாமல் தடுத்து நிறுத்தலாம்.

stop autoplay in computer
கம்ப்யூட்டரில் ஆட்டோ ப்ளே வசதியை தடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

Computer Auto Play வசதியை தடுத்து நிறுத்துவது எப்படி?


1. உங்கள் கம்ப்யூட்டரில் Start button கிளிக் செய்யுங்கள்.
2. Run என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. அடுத்து group policy என்ற விண்டோ தோன்றும்.
5. அதில் Administrative template என்பதை double Click செய்யுங்கள்.
6. அடுத்து System என்பதை கிளிக் செய்யுங்கள்.
7. அதில் தோன்றும் செட்டிங்ஸ் பக்கத்தில் Turn off AutoPlay Properties என்பதில் 8. டபுள் கிளிக் செய்யுங்கள்.
9. தோன்றும் விண்டோவில் Turnoff autoplay on என்பதில் All Drivers என்பதை தேர்ந்தெடுங்கள்.
10. இறுதியாக Ok என்ற பட்டனைச் சொடுக்கி வெளியேறுங்கள்.

இனி நீங்கள் புதிதாக பென்டிரைவை உங்கள் கணினியில் இணைக்கும்போது தானாகவே பிளே (Auto Play ) ஆகாது. இதனால் கம்ப்யூட்டரில் வைரஸ் பரவுவதும் தடுக்கப்படுகிறது.

மேற்கண்ட படிமுறைகளை பின்பற்றி கம்ப்யூட்டரில் Auto Play வசதியை தடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நீங்க நினைத்தால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளவும்.

தொடர்புடைய இடுகை: கம்ப்யூட்டரில் வைரஸ் பரவுவதற்கான காரணிகள் 

Share this

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.