logo blog

கம்ப்யூட்டரில் வைரஸ் பரவுவதற்கான காரணிகள்

கம்ப்யூட்டரில் வைரஸ் பரவுவதற்கான காரணிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

1. அகற்றத்தக்க ஊடகங்கள்: (Removable Device)
2. இன்டர்நெட் (Internet)
3. கம்ப்யூட்டர் வலையமைப்பு (LAN)
4. இமெயில் (Email)


1. அகற்றத்தக்க ஊடகங்கள் மூலம் வைரஸ் (Through Removable device)


ரீமூவபிள் டிவைஸ்  என்பதையே அகற்றதக்க ஊடகங்கள் என்கிறோம். அதாவது கம்ப்யூட்டரில் வெளிப்புறமிருந்து நாம் இணைத்து பயன்படுத்தும் சாதனங்கள். உதாரணமாக பென்டிரைவ், சிடி, SD Card போன்றவை.

இது போன்ற அகற்றத்தக்க ஊடகங்களில் ஏற்கனவே பதியபட்டிருக்கும் கோப்புகளை கம்ப்யூட்டருக்கு கொண்டு வரும் பொழுது அந்த பைல்களின் மூலம் பரவும். (ஏற்கனவே வைரஸ் பாதித்த கோப்புகள் அதில் இருக்கும்போது)

pendrive மூலம் வைரஸ் பரவுதல்
பென்டிரைவ்

cd-compact disc
சி.டி.
படிக்க: உங்கள் கம்ப்யூட்டரை பாதுகாத்திட சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள்


Hardisk moolam virus paravuthal
Floppy Drive மூமல் வைரஸ் பரவுதல்

2. இணையத்தின் மூலமாக வைரஸ் பரவுதல் (Through the Internet)


இணையத்திலிருந்து டவுன்லோட் செய்யும் மென்பொருட்கள் அல்லது பைல்கள் மூலம்.

அது போன்ற சாப்ட்வேர்களை திறந்து இன்ஸ்டால் செய்யும்பொழுது, கூடவே ஒட்டிக்கொண்டு வரும் எக்ஸ்டன்சன்கள் மூலம் வைரஸ் நிரல்களும் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும்.

internet moolam virus
இன்டர்நெட் வழியாக வைரஸ் பரவுதல்


3. மின்னஞ்சல் மூலமாக வைரஸ் பரவுதல் - (through email)

E Mail -ல் இணைத்து அனுப்பப்படும் கோப்புகளின்(Attached files) மூலமாகவும் வைரஸ் புரோகிராம் (நச்சு நிரல்கள்) கம்ப்யூட்டரில் வந்து அமர்ந்துகொள்ளும். இதைத் தவிர்க்க முன் பின் தெரியாத நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பது நல்லது.
e-mail
இ-மெயில் மூலம் வைரஸ் பரவுதல்

மின்னஞ்சலில் இணைத்து அனுப்பபடும் exe, .vbs, .shs, .pif, .cmd போன்ற விரிவுடைய கோப்புகளின் வழியாக வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சில நேரங்களில் நச்சு நிரல்கள் தொற்றியுள்ள கோப்புகள் இரண்டிரண்டு விரிவாக்கங்களுடன் காணப்படலாம்.

உ.ம்: hi.doc.exe

இதுபோன்ற கோப்புகளை திறக்கும்போதும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் பரவுகிறது.

4. கணிப்பொறி வலையமைப்பு மூலமாக வைரஸ் பரவுதல் (Through a computer network)


வலையமைப்பிலுள்ள இரண்டு கணிப்பொறிகளுக்கிடையே Data Sharing செய்யும்பொழுது ஒரு கம்ப்யூட்டரில் வைரஸ் இருந்தால், அதனுடனை வலையமைப்பில் இணைந்திருக்கும் மற்றொரு கம்ப்யூட்டரில் அந்த கோப்பினை திறக்கும்பொழுது, அந்த கம்ப்யூட்டருக்கும் வைரஸ் பரவிவிடும்.
computer network
கம்ப்யூட்டர் நெட்வொர்க்
ஒரு கம்ப்யூட்டரில் இதுபோன்ற வழிகளில் வைரஸ் பரவுகிறது. இதை அறிந்துகொண்டு, முன்னேற்பாடாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை நிறுவி, அதன் மூலம் அவற்றை ஸ்கேன் செய்த பிறகு , வைரஸ் இல்லையெனில் கோப்புகளை அகறத்தக்க ஊடகங்களை கம்ப்யூட்டரில் திறந்து பபயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:

1. வைரஸ் என்றால் என்ன?

2. கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை எப்படி கண்டறிவது?

இந்த பதிவில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்துகொண்டோம். இதில் கூறப்பட்டிருகும் வழிமுறைகளை பின்பற்றினாலே கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் என்பதே இல்லாமல் போகும்.

இதுபோன்ற பதிவுகள் உங்களை வந்தடைய எமது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யவும்.

Tags: Tamil Computer tips, Computer tips in Tamil, Computer Virus Protection, Protect Computer

பதிவை படித்திருந்தால் FaceBook, Twitter, Google + ல் SHARE செய்யவும்.

Share this

7 comments

தொடர்ந்து எழுதுங்கள். இணைய இணைப்பு பெற்று விட்டாலே வைரஸ் தொல்லை தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அவசியமான் பதிவு பழனி சார் நன்றி

பயனுள்ள தகவல் இது....

நன்றி @ பழனி கந்தசாமி, பாலா, vanjoor

விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

பதிவுகளைப் பற்றிய உங்களது கருத்துகளை இங்கே எழுதுங்கள்.