கருப்பு வெள்ளை புகைப்படங்களை கலராக்கலாம் ! [Tamil Photoshop Tutorial] - Tamil Tech

Nov 25, 2010

கருப்பு வெள்ளை புகைப்படங்களை கலராக்கலாம் ! [Tamil Photoshop Tutorial]

உங்கள் பழைய கருப்பு வெள்ளைப் புகைப்படங்களை கலரில் மாற்றுவது எப்படி?

புகைப்படங்களை எடிட் செய்ய, புதிய படங்களை உருவாக்குவதற்கு பயன்படுவது போட்டோஷாப் மென்பொருள். போட்டோஷாப் மென்பொருளில் உள்ள டூல்களை பயன்படுத்த தெரிந்துகொண்டால், ஓரளவிற்கு நீங்களும் போட்டோஷாப் மூலம் சில மேஜிக்களை செய்து மகிழலாம்.

சாதாரணமாக உங்களிடம் இருக்கும் பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்களை இந்த மென்பொருள் துணை கொண்டு அற்புதமான வண்ண படங்களாக மாற்றிடலாம்.

black and white to color photos

கருப்பு - வெள்ளை புகைப்படத்தை எப்படி கலராக்குவது?

1. போட்டோஷாப் திறந்துகொள்ளவும்.
2. File ==> Open ==> கொடுத்து உங்களது பழைய படத்தை திறந்துகொள்ளுங்கள்.
3. பிறகு ctrl+J அழுத்தி புதியதாய் திறந்த புகைப்படத்தின் டூப்ளிகேட் லேயரை உருவாக்கவும்.
4. இந்த டூப்ளிகேட் லேயரில்தான் வேலை செய்யப் போகிறோம்.4. டூப்ளிகேட் லேயரை செலக்ட் செய்யவும். (லேயரின் மீது கிளிக் செய்தால் செலக்ட் ஆகிவிடும்.)

5. புகைப்படத்தில்  உள்ள சட்டையை செலக்ஷன் டூல் பயன்படுத்தி செலக்ட் செய்யவும்..!

lasso tool in Photoshop
செலக்சன் டூல் (Lasso Tool)6. செலக்ட் செய்த பகுதியில்,  நீங்கள் விரும்பிய வண்ணத்தை பெயின்ட் பக்கெட் டூல் கொண்டு நிரப்பவும்.
paint bucket tool in photoshop


7. வண்ணத்தை நிரப்பிய பிறகு, கீழிருக்கும் படத்தில் உள்ளது போன்று இருக்கும். நான் சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன்.
8. பிறகு Ctrl +D அழுத்தி தேர்ந்தெடுத்த பகுதியை டீசெலக்ட் செய்யவும்.9. பிறகு மேற் செய்தபடியே முகம், கழுத்துப் பகுதியை லேசோ டூல் கொண்டு செலக்ட் செய்திடவும்.


10.  செலக்ட் செய்த பகுதிக்கு  தோலின் நிறம் கொடுக்கவும். நான் இந்த நிறத்தை (#ffe0bd)  நீங்கள் விரும்புகிற தோலின் நிறம் கொடுக்கலாம்.
 (கலர்பேலட்டிலிருந்து தேர்வு கொள்ளவும். அல்லது கூகிள் மூலம் சர்ச் செய்து எடுத்துக்கொள்ளவும். சில SKIN Colors : #ffe0bd | #ffcd94 |  #eac086 | #ffad60 | #ffe39f)

11. நான் #FFCCC நிறம் தேர்வு செய்துள்ளேன். பெயின்ட் பக்கெட் கொண்டு தேர்வு செய்யப்பட்ட முகப்பகுதியை  நிரப்பவும்.

12. அவ்வளவுதான். உங்களது புகைப்படம் இப்பொழுது கலர் புகைப்படமாக மாறியிருக்கும். சில பல வேலைகள் செய்து புகைப்படத்தை மேலும் மெருகூட்டலாம்.  (அனைத்தையும் இங்கே குறிப்பிட்டால், நிச்சயமாக குழப்பம் ஏற்படும். எனவே இதுவரைக்கும் செய்து பாருங்கள். படிப்படியாக கற்றுக்கொள்வதுதான் சிறந்தது. )

இறுதியாக, உங்கள் புகைப்படம் இவ்வாறு ஜொலிக்கும்..! (பார்டர் வைத்து பேக்ரவுண்ட் கலரினை மாற்றியுள்ளேன்)


வித்தியாசத்தைப் பாருங்கள்..! கருத்தை கூறுங்கள்.. சந்தேகம் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..


Tags: Black & White to  Color Photos, Photoshop, Tamil Photoshop Tutorial, Tamil Tech. 

No comments:

Post a Comment

Write Your Comments Here.